தீபங்கள் பேசும்
Sunday, July 10, 2005
தீபங்கள் பேசும்
தீபங்கள் பேசும்
1.
களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்..
2.
கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்
3.
பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?
4.
உயிரைக் கொடுத்து
உயிரை எடுப்பாய்.
தெரிந்தே காத்திருக்கிறேன்
உன் பார்வைக்காக
5.
கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது
6.
ஆனந்தமாயிருப்பேன்
உன் நினைவுகளால்
உணர்வுகள் நிறைந்தால்..
எனக்கோ
இயக்கமே நின்றல்லவாபோகிறது!
விழியின் ஓரவீச்சிலே
பிரபஞ்ச இடைவெளி
எனக்குள்.
உன் விழித் தடைகள
தாண்ட முடியாத
என் நேசம்
இதயத்துள் கரைவது
எப்போதோ?
மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.
பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்
நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்
7.
உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??
8.
பூங்காவில் சிதறிக் கிடந்த
பூக்களை அள்ளி எறிந்தேன்
நட்சத்திரங்களானது
வானில்
பரணில் கிடந்த ஊஞ்சல்
உடைந்த கண்ணாடி,
பாடாத வானொலி
கசங்கிய கவிதைக் காகிதங்கள்
தேடித் தேடி ரசிக்கிறேன்
உரக்க குரலெழுப்பி பாடுகிறேன்
தெறித்து ஓடும்
குயில் கூட்டத்தையும்
கவனிக்காமல்
தந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு
தாயின் கழுத்தில் பின்னிக் கொண்டு
தங்கையின் கன்னம் கிள்ளிக்கொண்டு
கண்ணாடி முன் நாணிக் கொள்கிறேன்
எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம்
உன் பிரியத்தை
சொன்ன
கணப்பொழுதிலிருந்துதான்.........
9.
நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....
10.
விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!
11.
நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,
12.
ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..
13.
தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்
முறைத்தவேறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!
14.
பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....
15.
கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்
மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல
ம்ம்ம் ம்ம்ம்
எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்...
16.
சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்
கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன
கரடி பொம்மை.....
17.
என்னைப் பார்த்தபடியே
படியிறங்க
தவறி விழுந்தாய்.
பதட்டத்தோடு கை கொடுக்க
சட்டையைப் பற்றி
கண்களில் முத்தமிட்டாய்
என்ன செய்ய
இன்றும் வெற்றி
உனக்குத்தான்........
18.
மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து
இதழ் பிரிக்காமலே
பேசிக் கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாகி..
19.
விரல் தொடக்கூட அனுமதிக்காத
நீ -
சுகமற்று கிடந்த என்னை
தோளோடு சாய்த்துக்கொண்ட வேளையில்
என்னைத் தழுவிய மூச்சுக்காற்றில்
பரிதவிப்போடு துடித்த
அன்பில் இளகிப் போன
இக்கணம் போல்
என்றும்
இருந்திடக் கூடாதா!!
20.
உள்ளே செல்லத் தடுக்கும்
கூச்சத்தால்
கல்லூரி வாசலிலே
காத்திருக்கிறேன.
பார்வை கண்டு
என்னருகே நீ வர
நலம் விசாரிக்கும்
உன் தோழிகளோடும்
பொறுமையாய் பேசுகிறேன்
ஆண்டவன் வரம் கொடுத்தாலும்
இந்தப் பூசாரிகள்....என
உள்ளுக்குள்
முணகிக் கொண்டே
21.
துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு
கை பற்றி இழுத்து
ஓர் இருக்கை ஊஞ்சலில்
மடியில் வைத்து
கூந்தல் விலக்கி
காது கடித்து
உதட்டோடு
உயிர் சேர்க்க
கணா கானண்கிறேன்.
அணைத்தால்
சூரியன் பார்க்கும்
பனியின் ஆசையென
அறியாமல்
22.
பேசிக்கொண்டே
உன் கைப்பையிலிருக்கும்
கைக்குட்டை,
சின்னப் பொட்டுகள்,
வண்ணத் தோடுகள்,
கொண்டை ஊசிகள்,
சாமி படங்கள் நடுவே
பிறந்த நாள் பரிசை
ஒளித்ததைக் கண்டு சிரிக்கிறது
என் முகம் பார்த்தாலும்
உன்னைக் காட்டிய
கண்ணாடி.....
23.
என் மேல் கோபம்
பேச மாட்டேன்,
பிடிக்கவில்லை,
போகிறேன்,
கடைசி சந்திப்பிது-
ஒட்டுக் கேட்டவர்கள்
ஆறுதல் சொல்லுகிறார்கள்
எதிர்பதங்களே
அருஞ்சொற்பொருளாகும்
நம் கூட்டின்
அகராதி தெரியாமல்...
24.
ஒதுங்கிப் போகும்
என் தம்பியின் கூச்சம் கலைத்து
அன்பைப் பொழிகிறாய்
ஆகாயமாய்
கூந்தலை உன்னிடம் தந்து
மடியில் உறங்கும் தங்கையிடம்
பங்கு கேட்கையில்
அவன் காதத் திருகியும்
சிரிக்கையில்தான் கண்டேன்
உனக்குள் இருக்கும்
தாயை.......
25.உன்னை இன்னொரு மகளென்ற
என் பெற்றோரும் திகைக்கிறார்கள்
தாலி பொருத்தம் இல்லா
நட்சத்திரக் குறிப்பால்...
நான் இல்லாமலே
உனக்கு தண்டனையாவதா?
காலத்திற்கும் சுமையாக இருப்பதா?
நேசத்ததற்காக இருளைத் தருவதா?
பதிலில்லா கேள்விகள்
தைக்க
வளர்ந்த சூழலின்
நம்பிக்கை சுழலில்
நேசத்தின் ழத்தில்
சிக்கி தத்தளிக்கிறது
மனம்.
பிரிவின் வலிகளை
தாங்கிடுவாய் என்றே
வேறொருவனை
என வாயெடுக்க
அதிராமல் கேட்டாய்.
நான் பிணமாய்
வாழ்வதுதான்
உன் விருப்பமா?
நான் உறைந்தே போனேன்
26.
உன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு
போய் விட
எனக்கு சுவாசமே
சிரமமாகிப்போனது.
உன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே
துயரமேதும் நேர்ந்திடுமோ என்ற
அச்சத் திரையை
உதறமுடியாமல்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீள்கிறது
இந்த இரவும்
என் தவிப்பும்
27.
கனவில்
திருமணமண்டபம்,
எங்கும் ஆரவார சத்தம்
என் உறவுகள் மனம் கலங்கி
போலிப் புன்னகை செய்கிறது,
ஆறுதல் சோல்ல என்னை
தேடி அலையும் கண்களோடு,
நானும் நுழைகிறேன்.
தளர்ந்தே நடந்தேன்.
ஒவ்வொரு நொடியும்
மனவலியாய்
என்னை சுற்றி கடக்கிறது..
சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
நெஞ்சம் நெருப்பாய் எரிய
சாட்சியாய் நிற்கிறேன்.
கண்ணீர் மறைக்க
முயன்று முடியாமல்
கைகுட்டையால் மறைத்து
அலைகிறேன் அங்குமிங்கும்...
வெறித்து வெறித்து பார்க்கிறேன்
அதிசியம் எதுவும் நிகழாதா
என்ற ஏக்கத்துடன்...
இன்னும் சிறிது நொடியில்
திருமணம் முடியப்போகிறது...
அட்சதையோடு நிற்கிறேன்
நொறுங்கிபோன பூமியின் மேல்
தாலியும் எடுத்தாகிவிட்டது.
கட்டிய காட்சி கண்டு
சன்னமாய் ஒரு பெருமூச்சு.
அம்மா-அப்பா!!
மணப்பெண்ணாய்
வேறொருவள்
28.
தனித்தனி
நேசம் நமக்கில்லை
நிருபித்த உன்முன்
சிறுமை உணர்வில்
நெஞ்சம் குறுகுறுக்க
முகம் பார்க்க முகமில்லாமல்
சன்னல் கம்பிகளில் புதைந்திருந்தேன்
கை பற்றி அருகே
அமரவைக்க
மெளனம் உடைத்து
உன் உள்ளங்கால்களை
நனைக்கிறேன்.
கன்னம் பிடித்து
நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
என் கறைகள்
29.
உடைபடாத நம் உள்ளங்கள்
சொற்களாய் உதடுகளிடையே
உடைபடாமல் வெளிவர
நடக்குதிங்கொரு
மெளனப் போராட்டம்....
வலி தந்த இறுக்கம் கலைக்க
சில தூரம் நடந்த வேளையில்
வலுத்துப் பெய்த
மழையிலும்
தொடர்கிறது நமது பயணம்
விரல் கோர்த்து
நனைந்தவாறே
30.
படபடப்போடு என்
சமையலெப்படியென
கேட்க
ஒரு துளி உப்பு
கூடிவிட்டதென்றேன்.
புடவைக்குள் மறைத்த
கொப்பளங்களை
பார்த்தவாறே
31.
உறவினர்கள்தான் என்றாலும்
தலை குனிந்த வந்து
நாணத்தோடு
வணக்கம் சொல்லி
ஓரக்கண்ணால்
என்னைக் காணாது
தவிக்கிறாய்.
முட்டிக் கிளம்பிய
கண்ணீர் துடைத்து
நீ கதவடைத்துக் கொண்ட
உன் அறையில்
நானிருந்தேன்
உன் புகைப்படதோடு
பேசிக் கொண்டு
32.
நெத்தியில் பொட்டு வைத்து,
தேங்காய் உருட்டி விளையாடி
தலையில் அப்பளம் உடைத்து
பொம்மையைப் போட்டு தாலட்டி
மோதரத்திற்க்காக
பானைக்குள் சடுகுடு என
நம் திருமணத்திலும்
வழக்கமான சடங்குகள்...
எல்லோரும் களைத்து ஓய்ந்துவிட்ட தருணத்தில்
என்னருகே அமர்ந்து
சுண்டுவிரலோடு
பின்னிக் கொண்டு
தோளில் சாய்ந்துகொள்ள
என் காதல் முத்தங்கள்
பனிமழையாய்
உன் உச்சந்தலையில்
33.திருமணத்துக்கு பின்
முதல் ஊடல்
நீண்ட தாமதத்திற்காக,
எப்போதும் வீழ்த்தும்
எதிர் எதிர் ஆயுதங்கள்...
மொழி திறக்கா
மெளனம்
இமை சுருக்கி
என்னை உருக்கும்
விழிகள்...
தலையோடு தலை முட்டி
இமையோடு இதழ் உரச
சொன்னாய் கவிதை..
சுமக்கிறேன்
மடியிலும்,வயிற்றிலும்
கணக்காத
பிள்ளைகளிரண்டு
34.
பண்டிகை நாள்
மேகக் கூந்தல் விரித்து
சாம்பிராணி புகையிட்டு
சிறுக்கணிக்கியால்
சிக்கெடுத்து,
ஒற்றைச் சடை பின்னி
கொத்து மல்லிகை
அள்ளி வைத்தேன்...
கன்னம் பிடித்து
புருவமிடையே
பூத்திருந்த
வேர்வை பூக்களை
குங்குமம் சிதறாமல்
உலர்த்துகிறேன்
என் வாசத்தில் தெரிந்த
பசியறிந்து
நீ ஊட்டிய
பத்திய சாப்பாட்டின்
பருக்கைகள் போல்
அமுதுண்டதில்லை
இதுவரை
35.
ஒருவருக்கொருவர்
குழந்தையாய்
இன்பத்தின் உச்சத்தில்
கழிகிறது நாட்கள் ...
ஈருயிர் இன்பத்தை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலற
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
இரு தவிப்பில்
காத்திருக்கிறேன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,
அருகிலமர்ந்து
உன் தாய்மைச் சூட்டை
உள்வாங்கி
நம் செல்லத்தின்
பிஞ்சுக்கரத்தோடு
உன்னையும்
இறுக பற்றுகிறேன்
மெலிதாய் நீ சிரிக்க
எனக்குள்
மழை
36.
இருவரின் நேசமும்
விகிதங்களின்றி
நம் குழந்தைக்குள்....
சின்ன சின்ன அசைவுகளுக்காக
ஆனந்த கூத்தாட்டம்..
முத்துப்பல் தெரிய சிரிக்க ..
அள்ளி நீ கொஞ்சிடும் நேரம்
.---ங்கே ---ங்கே
---ம்மா ----ம்ம்மா என
இதழ் பிரிகையில்
இதயங்களில்
குளிர்ச்சி..
தவழ்வதை ரசித்திருக்க
வடியும் எச்சிலை
ஓடிப்போய் துடைக்கிறாய்
எங்கே வழுக்கிடுமோ என்று.
சுகமாய் சுமந்து
நிலவை காட்டி
நானும் பிள்ளையாகிறேன்
நீ ஊட்ட போகும்
பிள்ளைச்சோற்றின்
கடைசி வாய்க்காக
37.
எச்சில் வடிய
உறங்கிக் கொண்டிருப்பேன்.
சேலையால் துடைத்துவிட்டு
பழிப்பு காட்டுவாய் ..
கள்ளனாய் கண்விழித்து
கை பற்ற நினைத்தால்
கூந்தலின் ஈரம் தெளித்து
நழுவிடுவாய்.
கலங்கிய வேளைகளில்
வாரியணைத்து
நேசமாய் தலை கோதி
உச்சியில் இதழ் பதிப்பாய்
கண்கள் சொருக
நான்
மரணம் விரும்பும்
கணங்கள் .
என்னுள் எல்லாமும் ஆன
உன் உயிரை முகர்ந்து
உறக்கம் கலைக்காமல்
சொடுக்கெடுத்து,
விரல்களில்
மருதாணி வைத்தேன்
விடியலில் சிவப்பாய்
என் முகம்
38.
நம்மிலும் சில நரைமுடிகள்..
விழிகளும்,மனங்களும்
உணர்ந்து கொள்வதால்
வார்த்தைகளாய்
பேசுவதில்லை ..
இயந்திரத்தன தேடல்
முடித்த
ஓய்வெனும்
இளவேனிற்கால..
ஞாயிறு மாலையில்
உன்னை தோளில்
சாய்த்து கொண்டு
பழைய கவிதைகள் சொல்ல
சிரிக்கிறாய்..
மயக்கம் தீரலியா அப்பாவுக்கு!!
நடுவில் அமர்ந்த
மகளின் கன்னம் வருடி
சொன்னேன்
எங்களுக்கு நீ
செல்ல பிள்ளை .
அவளுக்கு நான்தான்
முதல் பிள்ளை
39.
உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு கணத்திலும்
வேர்களை பிடித்திருந்த நிலமாய்
உயிரோடு கலந்திருந்தாய்.
உதிரும் போதெல்லாம்
மறுபடி மறுபடி
முளைக்க செய்தாய்...
உடல் பிரியும் முன்
ஏதேதோ பேச
நினைக்கிறேன்.
எதுவுமே பேசமல்
உனக்காக காத்திருப்பேன்..
அதுவரை காத்து ‘இருப்பேன்’
கண்களாலே சொல்லி
உன் மடியிலே
என்
எழும்பாத் துயில்
40.
உன் திருமணம் முடியும்வரை
தவறாகவே எண்ணியிருந்தேன்
காதலென்னவென்பதை
கனவுகளின் விருப்பத்தை
உடல்களின் சேர்க்கையை
எல்லை என்றிருந்ததையே
காதலென்றிருந்தேன்..
விலகியும்
நேசம் மாறாது
எதிர்பார்ப்புகளற்று
இன்று
உன் மீதிருப்பது
கூட
1.
களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்..
2.
கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்
3.
பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?
4.
உயிரைக் கொடுத்து
உயிரை எடுப்பாய்.
தெரிந்தே காத்திருக்கிறேன்
உன் பார்வைக்காக
5.
கூந்தலில் சூடிவிடும்
உன் அம்மாவிற்குத் தெரியாது
பூச்சரத்தின் முடிச்சுகளில்
நான் மாட்டிக் கொண்டிருப்பது
6.
ஆனந்தமாயிருப்பேன்
உன் நினைவுகளால்
உணர்வுகள் நிறைந்தால்..
எனக்கோ
இயக்கமே நின்றல்லவாபோகிறது!
விழியின் ஓரவீச்சிலே
பிரபஞ்ச இடைவெளி
எனக்குள்.
உன் விழித் தடைகள
தாண்ட முடியாத
என் நேசம்
இதயத்துள் கரைவது
எப்போதோ?
மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.
பதில் சொல்லாத
உன் மெளனமும்
அழகுதான்
நீ தொட்ட பூவில்
பதிந்த ரேகையில்
என் விலாவின் வாசம்
தெரிகிறதா எனத்
தொடர்கிறதென்
தேடல்
7.
உன் இமைகள் வேகமாகக் படபடக்க
காரணம்
பிறர்க்குத் தெரியாமல் களவாடிய
என் இதயத்துடிப்போடு
நீ விளையாடும் விளையாட்டென
எப்படிச் சொல்லுவாய்!!
எப்போது சொல்லுவாய்??
8.
பூங்காவில் சிதறிக் கிடந்த
பூக்களை அள்ளி எறிந்தேன்
நட்சத்திரங்களானது
வானில்
பரணில் கிடந்த ஊஞ்சல்
உடைந்த கண்ணாடி,
பாடாத வானொலி
கசங்கிய கவிதைக் காகிதங்கள்
தேடித் தேடி ரசிக்கிறேன்
உரக்க குரலெழுப்பி பாடுகிறேன்
தெறித்து ஓடும்
குயில் கூட்டத்தையும்
கவனிக்காமல்
தந்தையை உப்புமூட்டை தூக்கிக்கொண்டு
தாயின் கழுத்தில் பின்னிக் கொண்டு
தங்கையின் கன்னம் கிள்ளிக்கொண்டு
கண்ணாடி முன் நாணிக் கொள்கிறேன்
எல்லாம் எல்லாம்
எல்லாம் எல்லாம்
உன் பிரியத்தை
சொன்ன
கணப்பொழுதிலிருந்துதான்.........
9.
நீண்ட நேரமாய்
மேகம் பார்த்து,
மண் கிளறி கிளறி,
தாகமெடுக்கும் நாவை
உலரவிட்டு
இதயம் நனைக்கத் துடித்த
நம் முதல் சந்திப்பு.....
10.
விரும்பியபின் முதல் கேள்வி
நேசம் உண்மைதானா என்று?
இதழ் தொடுத்த அம்[ன்]பை
விழியால்
நெருங்க நெருங்க
விலகிச் செல்கிறாய்
புன்னகையால்
தாக்கிக் கொண்டே!!!!
11.
நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,
12.
ஊடலால்
இடைவெளி விட்டு அமர்ந்திருந்தோம்.
தூரத்தில் சிரித்த
சின்ன குழந்தையின் உதட்டில்
அனிச்சையாய் கூடின
நம் உயிர்கள்..
13.
தென்றல் கலைத்த
கூந்தலை சரிசெய்யவா என்றேன்
கைகளை உதறி நடந்தாய்
முறைத்தவேறே
நம்மருகே வந்த
நாயாருக்கு
நன்றி!!!
14.
பிரிந்திருந்த பொழுதெல்லாம்
மனதோடு பேசிப் பேசி
கூடல் பொழுதுகளிலும்
மொழியை மறந்துவிடும்
நம் இதழ்கள்.....
15.
கால்கள் தழுவிய
சலங்கைகள் களவாடி
முகம் பதித்தேன்
மணி( கண் ) ஒன்று
கன்னம் கிழித்தது
வந்தது குருதியல்ல
ம்ம்ம் ம்ம்ம்
எத்தனை மென்மையடி
உன் மனம்-
மருந்தாய்
வியர்வைத் துளிகள்...
16.
சின்ன பிரிவிற்காக
சமாதானமாகமல்
மெளனம் வளர்கிறேன்
கண்ணீரோடு நீ செல்ல
வருந்திய என்னை
கேலியாகச் சிரிக்கிறது
நீ விட்டுப் போன
கரடி பொம்மை.....
17.
என்னைப் பார்த்தபடியே
படியிறங்க
தவறி விழுந்தாய்.
பதட்டத்தோடு கை கொடுக்க
சட்டையைப் பற்றி
கண்களில் முத்தமிட்டாய்
என்ன செய்ய
இன்றும் வெற்றி
உனக்குத்தான்........
18.
மின்சாரமில்லா
மழை இரவில்
இமை மூடாமலே
அருகிலமர்ந்து
இதழ் பிரிக்காமலே
பேசிக் கொள்கிறோம்
அங்கே நானும்
இங்கே நீயுமாகி..
19.
விரல் தொடக்கூட அனுமதிக்காத
நீ -
சுகமற்று கிடந்த என்னை
தோளோடு சாய்த்துக்கொண்ட வேளையில்
என்னைத் தழுவிய மூச்சுக்காற்றில்
பரிதவிப்போடு துடித்த
அன்பில் இளகிப் போன
இக்கணம் போல்
என்றும்
இருந்திடக் கூடாதா!!
20.
உள்ளே செல்லத் தடுக்கும்
கூச்சத்தால்
கல்லூரி வாசலிலே
காத்திருக்கிறேன.
பார்வை கண்டு
என்னருகே நீ வர
நலம் விசாரிக்கும்
உன் தோழிகளோடும்
பொறுமையாய் பேசுகிறேன்
ஆண்டவன் வரம் கொடுத்தாலும்
இந்தப் பூசாரிகள்....என
உள்ளுக்குள்
முணகிக் கொண்டே
21.
துப்பட்டாவைக் கட்டிக் கொண்டு
கை பற்றி இழுத்து
ஓர் இருக்கை ஊஞ்சலில்
மடியில் வைத்து
கூந்தல் விலக்கி
காது கடித்து
உதட்டோடு
உயிர் சேர்க்க
கணா கானண்கிறேன்.
அணைத்தால்
சூரியன் பார்க்கும்
பனியின் ஆசையென
அறியாமல்
22.
பேசிக்கொண்டே
உன் கைப்பையிலிருக்கும்
கைக்குட்டை,
சின்னப் பொட்டுகள்,
வண்ணத் தோடுகள்,
கொண்டை ஊசிகள்,
சாமி படங்கள் நடுவே
பிறந்த நாள் பரிசை
ஒளித்ததைக் கண்டு சிரிக்கிறது
என் முகம் பார்த்தாலும்
உன்னைக் காட்டிய
கண்ணாடி.....
23.
என் மேல் கோபம்
பேச மாட்டேன்,
பிடிக்கவில்லை,
போகிறேன்,
கடைசி சந்திப்பிது-
ஒட்டுக் கேட்டவர்கள்
ஆறுதல் சொல்லுகிறார்கள்
எதிர்பதங்களே
அருஞ்சொற்பொருளாகும்
நம் கூட்டின்
அகராதி தெரியாமல்...
24.
ஒதுங்கிப் போகும்
என் தம்பியின் கூச்சம் கலைத்து
அன்பைப் பொழிகிறாய்
ஆகாயமாய்
கூந்தலை உன்னிடம் தந்து
மடியில் உறங்கும் தங்கையிடம்
பங்கு கேட்கையில்
அவன் காதத் திருகியும்
சிரிக்கையில்தான் கண்டேன்
உனக்குள் இருக்கும்
தாயை.......
25.உன்னை இன்னொரு மகளென்ற
என் பெற்றோரும் திகைக்கிறார்கள்
தாலி பொருத்தம் இல்லா
நட்சத்திரக் குறிப்பால்...
நான் இல்லாமலே
உனக்கு தண்டனையாவதா?
காலத்திற்கும் சுமையாக இருப்பதா?
நேசத்ததற்காக இருளைத் தருவதா?
பதிலில்லா கேள்விகள்
தைக்க
வளர்ந்த சூழலின்
நம்பிக்கை சுழலில்
நேசத்தின் ழத்தில்
சிக்கி தத்தளிக்கிறது
மனம்.
பிரிவின் வலிகளை
தாங்கிடுவாய் என்றே
வேறொருவனை
என வாயெடுக்க
அதிராமல் கேட்டாய்.
நான் பிணமாய்
வாழ்வதுதான்
உன் விருப்பமா?
நான் உறைந்தே போனேன்
26.
உன் அன்பை உறுதியாய்ச் சொல்லிவிட்டு
போய் விட
எனக்கு சுவாசமே
சிரமமாகிப்போனது.
உன் அன்பின் ஆழத்தில் மூழ்கி கிடப்பதாலே
துயரமேதும் நேர்ந்திடுமோ என்ற
அச்சத் திரையை
உதறமுடியாமல்
கிரகணம் பிடித்த நிலவாய்
நீள்கிறது
இந்த இரவும்
என் தவிப்பும்
27.
கனவில்
திருமணமண்டபம்,
எங்கும் ஆரவார சத்தம்
என் உறவுகள் மனம் கலங்கி
போலிப் புன்னகை செய்கிறது,
ஆறுதல் சோல்ல என்னை
தேடி அலையும் கண்களோடு,
நானும் நுழைகிறேன்.
தளர்ந்தே நடந்தேன்.
ஒவ்வொரு நொடியும்
மனவலியாய்
என்னை சுற்றி கடக்கிறது..
சடங்குகள் ஆரம்பிக்கின்றன.
நெஞ்சம் நெருப்பாய் எரிய
சாட்சியாய் நிற்கிறேன்.
கண்ணீர் மறைக்க
முயன்று முடியாமல்
கைகுட்டையால் மறைத்து
அலைகிறேன் அங்குமிங்கும்...
வெறித்து வெறித்து பார்க்கிறேன்
அதிசியம் எதுவும் நிகழாதா
என்ற ஏக்கத்துடன்...
இன்னும் சிறிது நொடியில்
திருமணம் முடியப்போகிறது...
அட்சதையோடு நிற்கிறேன்
நொறுங்கிபோன பூமியின் மேல்
தாலியும் எடுத்தாகிவிட்டது.
கட்டிய காட்சி கண்டு
சன்னமாய் ஒரு பெருமூச்சு.
அம்மா-அப்பா!!
மணப்பெண்ணாய்
வேறொருவள்
28.
தனித்தனி
நேசம் நமக்கில்லை
நிருபித்த உன்முன்
சிறுமை உணர்வில்
நெஞ்சம் குறுகுறுக்க
முகம் பார்க்க முகமில்லாமல்
சன்னல் கம்பிகளில் புதைந்திருந்தேன்
கை பற்றி அருகே
அமரவைக்க
மெளனம் உடைத்து
உன் உள்ளங்கால்களை
நனைக்கிறேன்.
கன்னம் பிடித்து
நீ பார்த்த பார்வையில்
கரைகிறது
என் கறைகள்
29.
உடைபடாத நம் உள்ளங்கள்
சொற்களாய் உதடுகளிடையே
உடைபடாமல் வெளிவர
நடக்குதிங்கொரு
மெளனப் போராட்டம்....
வலி தந்த இறுக்கம் கலைக்க
சில தூரம் நடந்த வேளையில்
வலுத்துப் பெய்த
மழையிலும்
தொடர்கிறது நமது பயணம்
விரல் கோர்த்து
நனைந்தவாறே
30.
படபடப்போடு என்
சமையலெப்படியென
கேட்க
ஒரு துளி உப்பு
கூடிவிட்டதென்றேன்.
புடவைக்குள் மறைத்த
கொப்பளங்களை
பார்த்தவாறே
31.
உறவினர்கள்தான் என்றாலும்
தலை குனிந்த வந்து
நாணத்தோடு
வணக்கம் சொல்லி
ஓரக்கண்ணால்
என்னைக் காணாது
தவிக்கிறாய்.
முட்டிக் கிளம்பிய
கண்ணீர் துடைத்து
நீ கதவடைத்துக் கொண்ட
உன் அறையில்
நானிருந்தேன்
உன் புகைப்படதோடு
பேசிக் கொண்டு
32.
நெத்தியில் பொட்டு வைத்து,
தேங்காய் உருட்டி விளையாடி
தலையில் அப்பளம் உடைத்து
பொம்மையைப் போட்டு தாலட்டி
மோதரத்திற்க்காக
பானைக்குள் சடுகுடு என
நம் திருமணத்திலும்
வழக்கமான சடங்குகள்...
எல்லோரும் களைத்து ஓய்ந்துவிட்ட தருணத்தில்
என்னருகே அமர்ந்து
சுண்டுவிரலோடு
பின்னிக் கொண்டு
தோளில் சாய்ந்துகொள்ள
என் காதல் முத்தங்கள்
பனிமழையாய்
உன் உச்சந்தலையில்
33.திருமணத்துக்கு பின்
முதல் ஊடல்
நீண்ட தாமதத்திற்காக,
எப்போதும் வீழ்த்தும்
எதிர் எதிர் ஆயுதங்கள்...
மொழி திறக்கா
மெளனம்
இமை சுருக்கி
என்னை உருக்கும்
விழிகள்...
தலையோடு தலை முட்டி
இமையோடு இதழ் உரச
சொன்னாய் கவிதை..
சுமக்கிறேன்
மடியிலும்,வயிற்றிலும்
கணக்காத
பிள்ளைகளிரண்டு
34.
பண்டிகை நாள்
மேகக் கூந்தல் விரித்து
சாம்பிராணி புகையிட்டு
சிறுக்கணிக்கியால்
சிக்கெடுத்து,
ஒற்றைச் சடை பின்னி
கொத்து மல்லிகை
அள்ளி வைத்தேன்...
கன்னம் பிடித்து
புருவமிடையே
பூத்திருந்த
வேர்வை பூக்களை
குங்குமம் சிதறாமல்
உலர்த்துகிறேன்
என் வாசத்தில் தெரிந்த
பசியறிந்து
நீ ஊட்டிய
பத்திய சாப்பாட்டின்
பருக்கைகள் போல்
அமுதுண்டதில்லை
இதுவரை
35.
ஒருவருக்கொருவர்
குழந்தையாய்
இன்பத்தின் உச்சத்தில்
கழிகிறது நாட்கள் ...
ஈருயிர் இன்பத்தை
ஓருயிரில் தரும் வலியில்
நீ துடித்து அலற
இதயம் துளைத்தவானாய்
குழந்தையின் அழுகைக்கும்
உன் தொடுகைகுக்குமாய்
இரு தவிப்பில்
காத்திருக்கிறேன்.
நம் மறுபிறப்பிற்காக,,,,,,,,
அருகிலமர்ந்து
உன் தாய்மைச் சூட்டை
உள்வாங்கி
நம் செல்லத்தின்
பிஞ்சுக்கரத்தோடு
உன்னையும்
இறுக பற்றுகிறேன்
மெலிதாய் நீ சிரிக்க
எனக்குள்
மழை
36.
இருவரின் நேசமும்
விகிதங்களின்றி
நம் குழந்தைக்குள்....
சின்ன சின்ன அசைவுகளுக்காக
ஆனந்த கூத்தாட்டம்..
முத்துப்பல் தெரிய சிரிக்க ..
அள்ளி நீ கொஞ்சிடும் நேரம்
.---ங்கே ---ங்கே
---ம்மா ----ம்ம்மா என
இதழ் பிரிகையில்
இதயங்களில்
குளிர்ச்சி..
தவழ்வதை ரசித்திருக்க
வடியும் எச்சிலை
ஓடிப்போய் துடைக்கிறாய்
எங்கே வழுக்கிடுமோ என்று.
சுகமாய் சுமந்து
நிலவை காட்டி
நானும் பிள்ளையாகிறேன்
நீ ஊட்ட போகும்
பிள்ளைச்சோற்றின்
கடைசி வாய்க்காக
37.
எச்சில் வடிய
உறங்கிக் கொண்டிருப்பேன்.
சேலையால் துடைத்துவிட்டு
பழிப்பு காட்டுவாய் ..
கள்ளனாய் கண்விழித்து
கை பற்ற நினைத்தால்
கூந்தலின் ஈரம் தெளித்து
நழுவிடுவாய்.
கலங்கிய வேளைகளில்
வாரியணைத்து
நேசமாய் தலை கோதி
உச்சியில் இதழ் பதிப்பாய்
கண்கள் சொருக
நான்
மரணம் விரும்பும்
கணங்கள் .
என்னுள் எல்லாமும் ஆன
உன் உயிரை முகர்ந்து
உறக்கம் கலைக்காமல்
சொடுக்கெடுத்து,
விரல்களில்
மருதாணி வைத்தேன்
விடியலில் சிவப்பாய்
என் முகம்
38.
நம்மிலும் சில நரைமுடிகள்..
விழிகளும்,மனங்களும்
உணர்ந்து கொள்வதால்
வார்த்தைகளாய்
பேசுவதில்லை ..
இயந்திரத்தன தேடல்
முடித்த
ஓய்வெனும்
இளவேனிற்கால..
ஞாயிறு மாலையில்
உன்னை தோளில்
சாய்த்து கொண்டு
பழைய கவிதைகள் சொல்ல
சிரிக்கிறாய்..
மயக்கம் தீரலியா அப்பாவுக்கு!!
நடுவில் அமர்ந்த
மகளின் கன்னம் வருடி
சொன்னேன்
எங்களுக்கு நீ
செல்ல பிள்ளை .
அவளுக்கு நான்தான்
முதல் பிள்ளை
39.
உன்னுடன் வாழ்ந்த
ஒவ்வொரு கணத்திலும்
வேர்களை பிடித்திருந்த நிலமாய்
உயிரோடு கலந்திருந்தாய்.
உதிரும் போதெல்லாம்
மறுபடி மறுபடி
முளைக்க செய்தாய்...
உடல் பிரியும் முன்
ஏதேதோ பேச
நினைக்கிறேன்.
எதுவுமே பேசமல்
உனக்காக காத்திருப்பேன்..
அதுவரை காத்து ‘இருப்பேன்’
கண்களாலே சொல்லி
உன் மடியிலே
என்
எழும்பாத் துயில்
40.
உன் திருமணம் முடியும்வரை
தவறாகவே எண்ணியிருந்தேன்
காதலென்னவென்பதை
கனவுகளின் விருப்பத்தை
உடல்களின் சேர்க்கையை
எல்லை என்றிருந்ததையே
காதலென்றிருந்தேன்..
விலகியும்
நேசம் மாறாது
எதிர்பார்ப்புகளற்று
இன்று
உன் மீதிருப்பது
கூட
posted by முத்துகுமரன் at 8:04 AM

20 Comments:
//Favorite Music
இளையராஜாவின் How to Name it
Favorite Books
மீராவின் கனவுகள்+கற்பனைகள் = காகிதங்கள் அப்துல் ரகுமானின் பித்தன் அறிவுமதியின் நட்புக் காலம்//
எனக்கும் நீங்கள் சொன்ன எல்லாமே ரொம்ப பிடிக்கும்..
உங்கள் கவிதைகளைப் பொறுமையாக படித்து பின்னூட்டமிடுகிறேன்.
நிறைய எழுதியிருக்கிறீர்கள். திகட்டி விடக்கூடாதே :-)
என் வலைப்பக்கம் வந்ததற்கு நன்றி கணேஷ். பொறுமையாக படித்தே கருத்து கூறுங்கள்....
மனதை எதோ செய்கிறது உமது கவிதைகள். அருமையான பதிவு
நன்றி இலா
அன்பு நண்பா,
உங்க தீபங்கள் வலைப்பூவிலும் பேசத் தொடங்கியது கண்டு மகிழ்ந்தேன்.
அனைவரின் மனமும் கவர வாழ்த்துகள்.
பல கவிதைகளை ரசித்தேன் என்றாலும் நாயாருக்கு நன்றி சொன்ன கவிதையை மிகவும் சிறப்பு. இன்னும் சிறப்பாக எழுத வாழ்த்துகள்.
நன்றாக எழுதி இருக்கிறீர்கள் முத்துக்குமரன். வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்தவர்களில் பலருக்கு இந்த பெயர் சகஜம். நீங்கள் அந்த பக்கமா?
அருமையான கவிதைகள் தோழரே.
நன்றி ராகவன். நாயார் கவிதை எனக்கும் பிடித்த கவிதையே...
இனி வரும் காலங்களில் இதைவிடச் சிறப்பாக எழுத கண்டிப்பாக முயற்ச்சிக்கிறேன்.....
நன்றி தேன் துளி. நான் மதுரைக்காரன்.
ஆனால் முன்று நான்கு தலைமுறைக்கு முன்பு கும்பகோணத்தில் இருந்திருக்கிறார்கள்....
முருகக்கடவுளை குறித்தே எனக்கு முத்துகுமரன் என்று வைத்திருக்கிறார்கள்.....
தங்கள் பாராட்டிற்கு நன்றி மூர்த்தி
மெல்லிய மனம் மீதில்
மயிலிறகுகளின் கனம்
உங்கள் கவிதைகள் .
நிறையவும் நிறைவாகவும் எழுதுங்கள். நன்றி
நன்றி இப்னு ஹம்துன்.....
முத்துகுமரன்
'காதலாகி' இசாக் போட்டாச்சு.
நீங்களும் போடறதா யோசனை இருக்கா?
இல்லைன்னா ஏற்கனவே நூலா வந்து நான் வாசிக்கலையா
முதல் வாழ்த்து உங்களுக்கு.
\\\மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.\\\
/நகைக்கடை -
நான் கொலுசைப் பார்க்கிறேன்
ஆசையாய்,
நீ மெட்டியைப் பார்க்கிறாய்
ஆழமாய்...,/
/
நடுவில் அமர்ந்த
மகளின் கன்னம் வருடி
சொன்னேன்
எங்களுக்கு நீ
செல்ல பிள்ளை .
அவளுக்கு நான்தான்
முதல் பிள்ளை/
நன்று
வாழ்க,வளர்க
madhumitha said...
முத்துகுமரன்
'காதலாகி' இசாக் போட்டாச்சு.
நீங்களும் போடறதா யோசனை இருக்கா?
இல்லைன்னா ஏற்கனவே நூலா வந்து நான் வாசிக்கலையா
முதல் வாழ்த்து உங்களுக்கு.
உங்கள் வாழ்த்துக்கு நன்றி மதுமிதா ( அக்கான்னு சொல்லலாமா?).... நான் உங்கள் கவிதைத் தொகுப்பை வாசித்திருக்கிறேன். பேர் நினைவில் இல்லை. ஆனால் அறிவுமதி அண்ணன் அமீரகத்தில் இருந்து எழுதிய அணிந்துரையுடன் வந்த புத்தகம் அது. மெல்லிய உணர்வுகளை மிக அழகாக படர விட்டுருந்தீர்கள். அந்த் புத்தகம் வாசிக்கும் போது உங்களைப் பற்றி இசாக் நிறைய சொல்லி இருக்கிறார்.
தீபங்கள் பேசும் கவிதைத் தொகுப்பு வருகிற பங்குனி மாதத்தில் துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பில் தமிழ் அலை வெளீயீடாக வெளியிடப்படும் ஐந்து கவிதை நூல்களில் ஒன்றாக வெளிவருகிறது.. வலைப்பூவில் நான் பதிந்திருப்பது கவிதைத் தொகுப்பின் ஒரு பகுதியே. மீதி நூலில்தான் வரும்...
உங்கள் வாழ்த்துகள் எனக்குள் உற்சாக ஊற்றுகளை தோற்றுவித்திருக்கிறது...
நன்றி
அன்புடன்
முத்துகுமரன்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்..
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று.
உண்மை பகன்றால் அந்த வரிகளுக்கே தலையாய பங்கு என்னை இங்கு இழுத்து வந்ததற்கு.
\\மணந்ததா? இல்லையா?
உன் கூந்தல் மலருக்காக
அனுப்பிய
என் மூச்சுக்காற்று.\\\
அருமையான வரிகள்.. ஆழ்ந்த காதல் உம்முள் புதைந்திருப்பது தெரிகிறது.
தாங்கள் ஒவ்வொரு கவிதையையும் தனித்தனிப் பதிவுகளாய் இட்டிருந்தால் 'நீளம்' என்ற ஒன்று ஆழமாய் அழுத்தாது படிக்கவரும் பெருமக்களை.
வாழ்த்துக்கள்...
//தாங்கள் ஒவ்வொரு கவிதையையும் தனித்தனிப் பதிவுகளாய் இட்டிருந்தால் 'நீளம்' என்ற ஒன்று ஆழமாய் அழுத்தாது படிக்கவரும் பெருமக்களை.//
ஆமாம் நண்பரே செய்திருக்கலாம். இதை நான் சேமிப்பாக பயன்படுத்தியதால்தான் ஒரே பதிவாக போட்டு விட்டேன். விரைவில் சில கூடுதல் கவிதைகளோடு இது கவிதைப் புத்தகமாக வெளிவர இருக்கிறது(வேறு பெயரில்)..
பின்னர் விபரங்கள் தெரிவிக்கிறேன்...
இது புதைந்து போன ஒரு காதலின் உணர்வுகள்தான்... மிகச்சரியாக புரிந்து கொண்டமைக்கு நன்றி
முத்துகுமரன்,
இந்தப் பதிவை இத்தனை நாள் பார்க்காமல் விட்டதற்காக வருத்தம் முதலில் :(; இப்போதாவது பார்த்ததற்காக மகிழ்ச்சி :)
நான் ரசித்தவை : 5, 8, 17, 25,
மிகவும் ரசித்தவை : 11, 12, 14, 23, 29
வெளிவரப் போகும் புத்தகத்துக்கு வாழ்த்துக்கள்..
வரப்போகும் மலரைப் பற்றிய உங்கள் கவிதையும் இந்தத் தொகுப்பில் இருக்கும் தானே?
கவிதைகளிலேயே முடிந்து போன இந்தத் திருமணத்துக்கு வாழ்த்த முடியாமல் போன வருத்தம் :(...
பிரசுரிக்க அல்ல :
புத்தகமாகப் போவதால், பிழைதிருத்தங்கள்:
13. //முறைத்தவேறே// - முறைத்த வாறே?
20. //முணகிக் கொண்டே// - முனகிக் கொண்டே
:)
போட்டியில் கலந்துகொள்ளும்படித் தங்களை அன்போடு அழைக்கிறேன். http://selventhiran.blogspot.com/2007/07/blog-post_24.html
Post a Comment
<< Home